தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக நொரம்பு மண் கடத்துவதாக தர்மபுரி கனிமவளத் துறைக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதனை தெடர்ந்து நேற்றிரவு கனிமவள உதவி இயக்குநர் பன்னீர்செல்வம் பாலக்கோடு அடுத்த சர்க்கரை ஆலை கூட்ரோடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக நொரம்பு மண் ஏற்றிக் கொண்டு வந்த லாரியை பிடித்து விசாரித்ததில், பாலக்கோடு புது பட்டாணியர் தெருவை சேர்ந்த லாரி டிரைவர் பழனி(வயது.47) என்பதும் சர்க்கரை ஆலை பின்புறம் உள்ள ஏரியில் இருந்து அனுமதி இன்றி சட்டவிரோதமாக நொரம்பு கடத்தி வந்ததும் தெரிய வந்தது. அதனை தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்து பாலக்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக