பாலக்கோடு கடை வீதியில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 27 டிசம்பர், 2024

பாலக்கோடு கடை வீதியில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், பாலக்கோடு போலீசார், பஸ்ஸ்டாண்ட், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 


அப்போது கடைத்தெருவில் உள்ள டீ கடை பின்புறம் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து கொண்டிருந்த நபரை பிடித்து விசாரனை செய்ததில் பாலக்கோடு கம்மாளர் தெருவை சேர்ந்த தினகரன் (வயது. 47) என்பதும் சட்டவிரோதமாக வெளிமாநில லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்ததும் தெரிய வந்தது, அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளையும் ஆயிரத்து 620 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad