மறுமலர்ச்சி ஜனதா கட்சி சார்பில் மாபெரும் கன்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 17 டிசம்பர், 2024

மறுமலர்ச்சி ஜனதா கட்சி சார்பில் மாபெரும் கன்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.


தருமபுரி மாவட்டம் அருர் அருகே புதுப்பட்டியில் சேலம் முதல் வாணியம்பாடி வரை தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக சுங்கசாவடி அமைந்துள்ளது இன்று 16.12.2024 சுங்க கட்டணம் வசுலிப்பதாக அறிவிப்பு செய்தார்கள் இச்சாலையானது சாமியாபுரம் கூட்ரோடு முதல் அயோத்தியாபட்டிணம் வரை சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.


மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கசாவடி இருந்தால் அதனை இழுத்து மூடப்படும் என கூறினார், கிருஷ்ணகிரி மாவட்டம் காரப்பட்டு முதல் புதுப்பட்டி 27 கிலோ மீட்டர் தான் இருக்கிறது இந்த சுங்கசாவடியை உடனடியாக மத்திய மாநில அரசுகள் அகற்ற வேண்டும், என மறுமலர்ச்சி ஜனதா கட்சி மாநில தலைவர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் கண்ட முழக்கம் முழங்கி பின் சுங்கசாவடி தற்காலிகமாக மூடப்பட்டது.


இதில் எம் சிவராஜ் மாநில துணைத்தலைவர் ஆனந்த சுப்பிரமணியம் மாநில பொதுச் செயலாளர் கே அரங்கநாதன் மாநில பொருளாளர் வேலுச்சாமி மருத்துவர் அணி மாநில செயலாளர் சுசிந்திரன் மாவட்ட செயலாளர் ரஜினி மாநில பொதுச் செயலாளர் தமிழ்செல்வன்  ஒன்றிய செயலாளர் வசந்த் நகர செயலாளர் பிரகாஷ் ராஜேந்திரன் ஒன்றிய நிர்வாகிகள் என ஏராளமானேர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad