இதன் காரணமாக 15 வயதிற்கு உட்பட்ட மகளிர் அணி மட்டைப்பந்து பிரிவில் விளையாட்டில் தற்போது விளையாடி வருகிறார். இதனை அடுத்து விளையாட்டு வீராங்கனையின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் அளவில் சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக மாணவி ரித்திகா உருவாக வேண்டி தனது சொந்த நிதியிலிருந்து பிக்கனஅள்ளி ஊராட்சி மன்ற தலைவி பத்மாவதி சுப்பிரமணி அவர்கள் கிரிக்கெட் விளையாட தேவையான அனைத்து பொருட்கள் அடங்கிய ரூபாய் 15,000 மதிப்புள்ள தொகுப்பினை விளையாட்டு வீராங்கனை ரித்விகாவுக்கு தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுத் தொகுப்பினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி ஒன்றிய செயலாளர்கள் எம். வீ.டி கோபால், கிருஷ்ணன், துணைத் தலைவர் வஜ்ரவேல், தளபதி முருகன், மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் ஆனந்தன், ஒன்றிய அவைத்தலைவர் முனுசாமி ,இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஹரிபிரசாந்த் மற்றும் நிர்வாகிகள் பெரியண்ணன், முனுசாமி,காட்ராஜ், ரத்தினகுமார் வினோத்குமார், சிவராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக