காரிமங்கலத்தில் அறிவுசார் மையத்தை அமைச்சர்கள் திறந்துவைத்தனர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 21 டிசம்பர், 2024

காரிமங்கலத்தில் அறிவுசார் மையத்தை அமைச்சர்கள் திறந்துவைத்தனர்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள், மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள், மாண்புமிகு உணவு – உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி அவர்கள் ஆகியோர் தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் நடைபெற்ற விழாவில், காரிமங்கலத்தில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம், பாப்பாரப்பட்டியில் ரூ.2.74 கோடி மதிப்பீட்டில் புதிய வாரச்சந்தை மற்றும் ரூ.4.35 கோடி மதிப்பீட்டில் 3 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், 1,557 பயனாளிகளுக்கு ரூ.19.52 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள், மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள், மாண்புமிகு உணவு – உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி அவர்கள் ஆகியோர் தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் நடைபெற்ற விழாவில், காரிமங்கலத்தில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம், பாப்பாரப்பட்டியில் ரூ.2.74 கோடி மதிப்பீட்டில் புதிய வாரச்சந்தை மற்றும் ரூ.4.35 கோடி மதிப்பீட்டில் 3 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், 1,557 பயனாளிகளுக்கு ரூ.19.52 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் இன்று (21.12.2024) வழங்கினார்கள்.


இந்நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தலைமைவகித்தார். மேலும், பேரூராட்சிகள் துறை இயக்குநர் திரு. கிரண் குராலா, இ.ஆ.ப., அவர்கள், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சி, வார்டு எண்.14, காமராஜர் நகரில் 2023-2024 கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.40 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அறிவுசார் மையத்தினையும், பாப்பாரப்பட்டி பேரூராட்சி, வார்டு எண். 5, கடைத்தெருவில் 2022-2023 கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.74 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய வாரச்சந்தையினையும், காரிமங்கலம் ஒன்றியம், காளப்பனஅள்ளி புதூரில் 2023-2024 ஆம் ஆண்டு கனிமங்கள் மற்றும் குவாரிகள் திட்டத்தின் கீழ், ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையக் கட்டடத்தினையும், காரிமங்கலம் ஒன்றியம், அடிலம் ஊராட்சியில் 2021-2022 ஆம் ஆண்டு நபார்டு திட்டத்தின் கீழ் பூனாத்தனஅள்ளி முதல் அ.சப்பாணிப்பட்டி வரை ரூ.2.07 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய உயர்மட்ட பாலத்தினையும், காரிமங்கலம் ஒன்றியம், புலிக்கல் ஊராட்சியில் 2023-2024 ஆம் ஆண்டு நபார்டு திட்டத்தின் கீழ், ரூ.2.14 கோடி மதிப்பீட்டில் பூலாப்பட்டி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய உயர்மட்ட பாலம் மற்றும் உப்புபள்ளம் முதல் ஆத்துக்கொட்டாய் வரை அமைக்கப்பட்டுள்ள சாலை என மொத்தம் ரூ. 8.49 கோடி மதிப்பீட்டில் 5 முடிவுற்ற திட்டப்பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள், மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள், மாண்புமிகு உணவு – உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி அவர்கள் ஆகியோர் திறந்து வைத்தார்கள்.


மேலும், மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள், மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள், மாண்புமிகு உணவு – உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி அவர்கள் ஆகியோர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 423 பயனாளிகளுக்கு ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் 200 நத்தம் வீட்டுமனை பட்டாக்கள், 73 இணையவழி பட்டாக்கள், 150 மின்னணு குடும்பஅட்டைகளையும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 396 பயனாளிகளுக்கு ரூ.3.58 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் உதவிகளையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை (மகளிர் திட்டம்) சார்பில் 500 பயனாளிகளுக்கு ரூ.3.95 கோடி மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்கடன் உதவிகளையும், வேளாண்மைத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 11 விவசாயிகளுக்கு ரூ.2.26 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.21.50 இலட்சம் மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொகை மற்றும் திருமண உதவித்தொகைகளையும், ஊரக நலப்பணிகள் சார்பில் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் 200 பயனாளிகளுக்கு ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டைகளையும், வனத்துறையின் சார்பில் தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் யானையால் தாக்கப்பட்டு இறந்த 2 நபர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.19.00 இலட்சம் மதிப்பீட்டில் நிவாரண உதவித்தொகைகள் என மொத்தம் 1557 பயனாளிகளுக்கு ரூ.19.52 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.


மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தும் வகையிலும், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள்.


மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் 490 பேரூராட்சிகளும், 138 நகராட்சிகளும், 25 மாநகராட்சிகளும்  பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளார்கள். தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் புதிய பேருந்து நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், வார சந்தைகள், குளங்கள், குடிநீர் திட்டங்கள், அறிவுசார் மையங்கள் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிகள், புதிய அலுவலக கட்டிடங்கள் கட்டும் பணிகளும், சாலைகள், மழைநீர் வடிகால்கள் பாலங்கள், கழிப்பிடங்கள், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளும் வகையில் கடந்த 3 ஆண்டுகளில் ரூபாய் பத்தாயிரம் கோடி நகராட்சி துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.


இன்றைய தினம் நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ், பேரூராட்சிகள் துறையின் சார்பில் இவ்விழா நடைபெறும் காரிமங்கலம் பேரூராட்சியில் மட்டும், கடந்த மூன்று ஆண்டு காலத்தில் ரூ.28.43 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் முடிக்கப்பட்டும், நடைபெற்றும் வருகிறது. மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேளாண்மைத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, வேளாண்மை துறைக்கென இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூபாய் 55 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து, அறிவுத்துள்ளார்கள்.


உணவுத்துறைக்கு ரூபாய் 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து, அறிவுத்துள்ளார்கள். வேளாண்மைத்துறையில் இலவச டிராக்டர்கள், வேளாண் கருவிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதொடு, விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கின்ற வகையில் விவசாய விளைபொருட்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி அதை விற்பனை செய்வதற்கான ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகளை விவசாயிகளுக்கு வேளாண்துறை அலுவலர்கள் பல்வேறு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்கள் மூலம் வழங்கி வருகின்றனர்.


மாண்புமிகு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களால் 1972-ல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஏற்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைக்கிணங்க, அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நமது தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பொருட்டு ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டம் ரூ.1928.80 கோடி மதிப்பீட்டில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனத்தின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு, 24 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.


மேலும், தற்பொழுது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் புளோரைடு குறைப்பு திட்டத்தின் 2-ஆம் கட்டப்பணிகள் ரூ.7,928 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என அறிவித்து, தற்போது இத்திட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகளை ஜப்பான் குழுவினர் வருகைதந்து பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு சென்றுள்ளனர். இப்பணிகள் விரைவில் முடிவுற்று, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டம் செயல்படுத்துவதன் மூலம் சுமார் 35 இலட்சம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் முழுமையாக வழங்கப்படும். இவ்வாறு மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தெரிவித்தார்.


மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் இளைஞர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தவும், அறிவை மேம்படுத்தவும், திறனாய்வு சிந்தனையை வளர்க்கவும், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் அறிவுச்சார் மையங்கள் திறந்துவைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கல்வி மற்றும் பொது அறிவினை வளர்த்து பயன்பெறும் வகையில் கணினி மற்றும் இணையதள வசதிகளுடன் இம்மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 


மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தயாராகும் வகையில் அனைத்து விதமான புத்தகங்களும், மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில் அரங்குகள் உள்ளன. ஒரு குளிரூட்டபட்ட அறை போன்ற அனைத்து விதமான அடிப்படை வசதிகளோடு நவீன முறையில் இந்த அறிவுசார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகவும் மற்றும் வேலை தேடும் இளைஞர்களுக்கு ஏதுமாகவும் அறிவுசார் மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.


இந்த மையத்தில் வரவேற்பு அறை, மேலாளர் அறை, ஆண்கள் மற்றும் பெண்கள் தனியே அமர்ந்து படிக்கும் இடம், குழந்தைகள் படித்து பயன்பெறும் வகையில் நவீன வசதிகளுடன் அமையப்பெற்ற இடம் மற்றும் கூட்டரங்கமும், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய வகுப்பறையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் நாளொன்றுக்கு ஏறக்குறைய 500 மாணவர்கள் படித்து பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணாக்கர்களுக்கென வழிகாட்டுதலுடன் கூடிய பாட புத்தகங்கள், அறிவியல், இலக்கியம், வரலாறு, ஆராய்ச்சி கட்டுரைகள் என பல துறைகள் சார்ந்த புத்தகங்கள் மாணவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு புத்தகங்கள் இம்மையத்தில் உள்ளது. 


மேலும் மையத்தில் கட்டுப்பாட்டு அறை கணினி வசதி, 5 எண்ணிக்கையில் கழிவறை வசதி மற்றும் குடிநீர் வசதி, மின்வசதி ஆகிய அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் இன்றைய தினம் காரிமங்கலம் பேரூராட்சியில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம், பாப்பாரப்பட்டியில் ரூ.2.74 கோடி மதிப்பீட்டில் புதிய வாரச்சந்தை மற்றும் ரூ.4.35 கோடி மதிப்பீட்டில் 3 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், 1557 பயனாளிகளுக்கு ரூ.19.52 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது. 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் தருமபுரி மாவட்டத்திற்கு 4 முறை வருகை புரிந்து, பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை இம்மாவட்டத்திற்கு வழங்கியுள்ளார். மாணவ, மாணவியர்கள் அடிப்படை வசதிகளுடன் கூடிய நூலகம் மற்றும் அறிவுசார் மையங்களையும், அவற்றில் உள்ள ஏராளமான புத்தகங்களை பள்ளி கல்லூரி படிப்பிற்குப் பிறகு போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்திட அரிய வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அனைத்து வசதிகளையும் கொண்ட இதுபோன்ற அறிவுசார்மையங்களில் உள்ள ஏராளமான புத்தகங்களை பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றியாளர்களாக மாறுவதற்கான ஊக்கம் பெற வேண்டும். இவ்வாறு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.செ.கணேஷ், காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் திரு.பி.சி.ஆர்.மனோகரன், முன்னாள் அமைச்சர் முனைவர்.பி.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம்.பெ.சுப்பிரமணி, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, காரிமங்கலம் பேரூராட்சி துணைத்தலைவர் திரு.கே.வி.கே.சீனிவாசன், பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி.ஆயிஷா, தருமபுரி நகர்மன்ற தலைவர் திருமதி.லட்சமி நாட்டான் மாது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.இன்பசேகரன், திரு.மனோகரன், கைம்பெண் நல வாரிய உறுப்பினர் திருமதி.ரேணுகாதேவி உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad