ஃபெஞ்சல் புயல் காரணமாக தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோட்டப்பட்டி அருகே ஆவாளூர் இணைக்கு சாலையில் ஆற்று வெள்ளப் பெருக்கு மற்றும் ஆவாளூர் சிலம்பை செல்லும் தரைப்பாளம் வெள்ளத்தால் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு இதனால் சிலம்பையில் உள்ள 100 குடும்பங்கள் தவிப்பு மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. ராஜேந்திரன் அவர்கள் நேரில்பார்வையிட்டு ஆய்வு செய்து கிராம மக்களுக்கு தேவையான உணவு, பால், பிஸ்கட் வழங்கி இப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களிடம் பரிந்துரைக்கப்படும் என்று கிராம மக்களிடம் கூறினார்.
இப்பகுதியில் பேரிடர் மீட்டி குழு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. வருவாய்துறை காவல்துறை, தீயனைப் துறை, கிராம மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.சாந்தி, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பி.பழனியப்பன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஒன்றிய செயலாளர்கள் கோ.சந்திரமோகன், வே.சௌந்தரராசு, சி.முத்துக்குமார், P.S.சரவணன், மாவட்ட ஐடி விங் ஒருங்கிணைப்பாளர்கு தமிழழகன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக