இது குறித்து ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஒட்டப்பட்டி சரவணன் கூறுகையில் : தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியமான மாதம் மார்கழி மாதம். அந்த மாதத்தில் எல்லோரும் காலையிலேயே எழுந்து இறை வழிபாடு செய்வது தொன்று தொட்டு வரும் பழக்கம். தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு தை மாத முதல் ஆனி மாதம் வரையில் பகல் பொழுதாகவும், ஆடியில் இருந்து மார்கழி மாதம் வரையில் இரவாகவும் கருதப்படுகிறது.
அப்படி பார்க்கும்போது மார்கழி மாதம் தேவலோகத்தின் விடியற்காலை அதனால இந்த மாதம் அதிகாலையிலேயே எழுந்து நீராடி இறைவனை வணங்கினால் ஆரோக்கியத்துடன் குடும்பத்தில் ஐஸ்வரியம் பெருகி வாழ தேவர்கள் ஆசிர்வதிப்பார்கள் என்பது நம்பிக்கை. ஆனா அறிவியல் படி பார்த்தால் மார்கழி மாதத்தில் தான் ஓசோன் படலம் பூமிக்கு அருகாமையில் காலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை உள்ளது. அதனால் அந்த நேரத்தில் ஆக்ஸிஜனை சுவாசித்தால் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் பெருகி உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஆதனால் தான் பெண்கள் அதிகாலையிலே எழுந்து கோலம் போடவும், ஆண்கள் பெண்கள் இருவரும் பஜனை பாடல்களை பாடவும் தெய்வத்தின் பெயரால் அறிவுறுத்தப்படுகிறது. மாதங்களில் நான் மார்கழி என்று பகவான் கண்ணன் கீதையில் கூறியிருக்கிறார். இந்த மார்கழி மாதம் பிள்ளையார் கோவில் பூஜையோடு தொடங்கும்.
அதன்படி ஒட்டப்பட்டி கிராமத்தில் அதிகாலையிலே ஆண்கள் பெண்கள் குழந்தைகள் எழுந்து நீராடி ஊர்கவுண்டர் தணிகாசலம் தலைமையிலான பஜனை குழுவினர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ திம்மராய பெருமாள் சுவாமி ஆலயத்தில் இருந்து ஒட்டப்பட்டி கிராமம் முழுவதும் ஒரு தெருவாக பஜனை உற்சவம் பாசுரங்கள் பாடி வருவார்கள். சிலர் தங்கள் வீட்டுக்கும் அந்த பஜனை குழுவை அழைத்து அவர்களுக்கு பால் பாயாசம், மிளகு பாலும் சர்க்கரை பொங்கலும் கொடுத்து உபசரிப்பது வழக்கம் இவ்வாறு செய்ததால் அந்த குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு இறைவன் அருள் முழுமையாக கிடைக்கும் நல்லதே தொடர்ந்து அந்த குடும்பத்துக்கு நடக்கும் நம் நம்பிக்கை.
தலைமுறை தலைமுறையா பஜனை குழு சார்பில் நடந்து கொண்டிருக்கிற இந்த பஜனை குழு ஒட்டப்பட்டியில் அனைத்து தெருவிலும் பாடல்கள் பாடி சுற்றி வந்து பெண் இறுதியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ திம்மராய பெருமாளை தரிசித்த பின் அந்த பஜனை குழுவில் உள்ள பெரியவர்களில் ஒருவர் பக்தி கதைகளை தினம் ஒவ்வொன்னு சொல்ல மங்களப்பாடி நிறைவு செய்வார்கள். இந்த மார்கழி மாதம் பாதை நோன்பு இருந்து திருப்பாவை திருவெம்பாவை பாடி இறைவனை வழிபட திருமணம் கைகூடும். குழந்தை பெயர் கிட்டும் நம்பிக்கை என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக