தருமபுரி ரங்கா டிபார்ட்மெண்ட் புத்தாண்டையொட்டி 50க்கும் மேற்பட்ட விதவிதமான மாடல்கள் கேக்குகள் விற்பனை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 30 டிசம்பர், 2024

தருமபுரி ரங்கா டிபார்ட்மெண்ட் புத்தாண்டையொட்டி 50க்கும் மேற்பட்ட விதவிதமான மாடல்கள் கேக்குகள் விற்பனை.


2025-புத்தாண்டு தினத்தை சிறப்பாக கொண்டாட பொதுமக்கள் இப்போது தயாராகி விட்டனர். இந்த புத்தாண்டு தினத்தில் வீடுகள், கடைகள் மற்றும் பொது இடங்களில் பொதுமக்கள் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி ஒருவருக்கொருவர் கேக்குகளை வழங்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வர். அதன்படி புத்தாண்டையொட்டி தர்மபுரி நகரில் ரங்கா டிபார்ட்மெண்ட் உள்ள  பேக்கரிகளிலும் கேக்குகள் விற்பனை விறுவிறுப்பு அடைந்துள்ளது. 


அரை கிலோ முதல் 5 கிலோ வரை விதவிதமான மாடல்கள் மற்றும் வண்ணங்களில் கேக்குகள் விற்பனைக்கு வந்துள்ளது. தர்மபுரி நகரில் உள்ள பேக்கரிகளில் நூற்றுக்கணக்கான கேக்குகள் பொது மக்களின் பார்வைக்காக வைத்துள்ளனர். பொதுமக்கள் குடும்பத்துடன் இந்த கேக்குகளை வாங்க அணிவகுத்து வருகின்றனர்.


தர்மபுரி நகரில் நேதாஜி பைபாஸ் ரோட்டில் உள்ள ஸ்ரீ ரங்கா பேக்கரியில் புத்தாண்டையொட்டி 10 ஆயிரம் கேக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை வாங்க பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். பிளாக் பாரஸ்ட்  ஒயிட்  பாரஸ்ட், ஹனி கேக், ஐஸ்கிரீம் கேக் என விதவிதமான கேக்குகள் விற்பனை சூடு பிடித்துள்ளது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பும் வகையில் பல்வேறு வகையான கேக்குகள் இந்த ஆண்டு விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad