தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நகர நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து பணிமனை, தக்காளி மார்கெட், வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரூம், சாக்கடை கால்வாயும் கலந்து சாலையில் தேங்குவதால் அவ்வழியாக செல்லும், பொதுமக்கள் , இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது தெறித்து விழுவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறையினரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை, எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மழைநீர் முற்றிலும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக