பொம்மிடியில் தேசிய மின் சிக்கன வார விழா பேரணி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 24 டிசம்பர், 2024

பொம்மிடியில் தேசிய மின் சிக்கன வார விழா பேரணி.


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கடத்தூர் கோட்டம் சார்பில் இன்று (24.12.2024) தேசிய மின் சிக்கன வார விழா நடைபெற்றது.  


இம்மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு குறித்த பேரணியை செயற்பொறியாளர் C.T செந்தில்ராஜ் அவர்கள் தலைமை வகித்து கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணி பொம்மிடி மின்வாரிய அலுவலகத்தில் இருந்து தொடங்கி துரிஞ்சிப்பட்டி, நடுர் பொம்மிடி கடைவீதி ,ரயில் நிலையம் வரை சென்று மீண்டும் பொம்மிடி பஸ் நிலையத்தில் முடிவுற்றது. பேரணியின் போது மின் சிக்கனத்தை வலியுறுத்தும் வகையில் கோஷங்கள், பதாகைகளும் ஏந்தி செல்லப்பட்டது.


பொது மக்களுக்கு மின் சிக்கன துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது இப்பேரணியில் கடத்தூர் மொரப்பூர் பொம்மிடி சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள், உதவி செயற்பொறியாளர்கள் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad