தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி மின்வாரியத்தில் தேசிய மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி பாலக்கோடு கோட்ட செயற்பொறியாளர் வனிதா அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் மாரண்டஅள்ளி மின்வாரியத்தில் இருந்து மின் சிக்கனம் மற்றும் மின்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கோட்ட செயற்பொறியாளர் வனிதா பேரணியை துவக்கி வைத்தார்.
இப்பேரணியானது மாரண்டஅள்ளி கடை வீதி, நான்கு ரோடு, பேருந்து நிலையம் வழியாக சென்று மின்வாரியத்தை அடைந்தது. ஊர்வலத்தின் போது மின் சிக்கனம் மற்றும் மின்பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர், இந்த நிகழ்வில் உதவிசெயற் பொறியாளர்கள், உதவிபொறியாளர்கள், மற்றும் அனைத்து பணியாளர்களும் திரளாக கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக