தருமபுரி மாவட்டம் உணவு பொருள் வழங்கல் மற்றும் தருமபுரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு துறை, பென்னாகரம் வட்ட நுகர்வோர் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு சங்கம் இணைந்து நல்லானூர் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு தேசிய நுகர்வோர் தின விழா கருத்தரங்கம் நடைபெற்றது. நுகர்வோர்கள் பற்றிய விளக்கம், விழிப்புணர்வுகள் ஆகிய கருத்துக்களை மாணவர்களுக்கு தெரிவித்தனர்.
நிகழ்ச்சி தலைமையுரையை கல்லூரி தாளாளர் முனைவர் கோவிந்த், முதல்வர் முனைவர் பரஞ்ஜோதி வழங்கினர். சிறப்பு அழைப்பாளராக நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் செம்மலை, வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதிரன், உணவு பாதுகாப்பு அலுவலர் பாணுசுஜாதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை கல்லூரி கணிதத்துறை தலைவர் பேராசிரியர் சதீஸ் குமார் ராஜா வரவேற்புரை ஆற்றினார், தொகுப்பாளராக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் நாகராஜ் இருந்தார். நுகர்வோர் நலச்சங்கம் சார்பாக திருநாவுக்கரசு, ஜாய், கந்தசாமி, ஈஸ்வரி, ராஜலட்சுமி, மணிவண்ணன் கலந்து கொண்டனர். நன்றியுரையை நுகர்வோர் சங்க தலைவர் சம்பத்குமார் வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக