பாலக்கோடு அருகே புதிய தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலையை மறித்து ஆக்கிரமிப்பு; வாகன ஓட்டிகள் அவதி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 30 டிசம்பர், 2024

பாலக்கோடு அருகே புதிய தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலையை மறித்து ஆக்கிரமிப்பு; வாகன ஓட்டிகள் அவதி.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தளவாய்ஹள்ளிபுதூர் கிராம பகுதியில் புதிய நான்கு வழி சாலை அதியமான்கோட்டை முதல் ஓசூர் வரை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றனர். 


இந்நிலையில் தளவாய்ஹள்ளிபுதூர் மேம்பாலம் பகுதியில் சர்வீஸ் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் செய்யப்பட்டுள்ளதால் எர்ரணஹள்ளி, ரெட்டியூர், தளவாய்ஹள்ளிபுதூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் இருந்து சொகுசு கார், லாரி, பேருந்து, இருசக்கர வாகனங்கள் ஆகியவை சர்வீஸ் சாலையில் செல்ல முடியாமல் தேசிய நெடுஞ்சாலையில் எதிர் எதிசையில் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புதிய தேசிய நெடுஞ்சாலை திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே ஏற்பட்ட தொடர் விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது குறிப்பிட தக்கது. 


மேலும் விபத்துக்கள் ஏற்பாடாமல் தடுக்க உடனடியாக மாவட்ட நிர்வாகம் தளவாய் அள்ளி புதுர் பகுதியில் சர்வீஸ் சாலையில் ஆக்கிரமிபுக்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad