தருமபுரி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த முதியோர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு..! - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 10 டிசம்பர், 2024

தருமபுரி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த முதியோர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு..!


தருமபுரி நகர பேருந்து நிலையத்தில்  பேருந்துக்காக காத்திருந்த ஒரு முதியவர்  திடீரென மயங்கி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்டனர். 


இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் பேருந்து நிலையத்தில் மயங்கி கிடந்த முதியவரை ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மயக்கம் அடைந்த வரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 


மயக்கம் அடைந்த முதியவர் நடுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தால் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad