தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், இருளப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில் மீட்கப்பட்ட கொத்தடிமைகள் விடியல் திட்டத்தின்கீழ், இருளர் இன மக்களின் வாழ்வாதாரத்திற்கு தொழில் குழு அமைக்கப்பட்டு, ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் தொழிற்கூடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்துவைத்து, 25 பயனாளிகள் பயன்பெறும் வகையில் தொழிற்கூடத்திற்கான தையல் இயந்திரங்களை இன்று (10.12.2024) வழங்கினார்.
இதனை தொடர்ந்து, ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் PM Janman மற்றும் கலைஞர் கனவு இல்ல திட்டங்களின் கீழ், தலா ரூ.3.60 இலட்சம் மதிப்பீட்டில் 8 வீடுகள் கட்டப்பட்டு வரும் பணியினையும், PMGSY திட்டத்தின் கீழ், ரூ.1.83 கோடி மதிப்பீட்டில் இருளப்பட்டி முதல் நாகலூர் பெரும்பள்ளம் வரையிலான சாலை அமைக்கும் பணியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார். இப்பணிகளை தரமாகவும், குறிபிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், இருளப்பட்டி காளியம்மன் கோவில் அருகில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு பணியினையும், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் ரூ.7.80 இலட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு பணியினையும், இருளப்பட்டி-நாகலூர் அருகில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாடு நிதி திட்டத்தின் கீழ், ரூ.12.00 இலட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மையக்கட்டடம் கட்டப்பட்டு வரும் பணியினையும், ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் இடத்தினையும், இருளப்பட்டி நியாய விலை கடையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பாவையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களுக்கு கொண்டுவர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுத்தினார். தொடர்ந்து, இருளர் சமூக மக்களுக்கு இருளர் நலத்திட்ட அடையாள அட்டைகளை வழங்கினார்.
பின்னர், அரூர் வட்டம், தீர்த்தமலை சாலை முதல் பூதிநத்தம் சாலையில் பெஞ்சல் புயலால் பழுதான தரைபாலத்தினையும், வீரப்பநாய்க்கன்பட்டி ஊராட்சி, கூடலூர் முதல் முருகர் கோயில் செல்லும் சாலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் பொது நிதி பங்குத் தொகை ரூ.48.50 இலட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் கட்டும் பணியினையும், வேடகட்டமடுவு ஊராட்சி, டி.ஆண்டியூர் கிராமத்தில் நபார்டு திட்டத்தின் (2024-2025 ஆம் ஆண்டு) கீழ் ரூ.18.42 இலட்சம் மதிப்பீட்டில் 30000 லிட்டர் மேல்நிலை நீர்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணியினையும், இதே ஊராட்சியில் 15-வது மத்திய நிதிக்குழுமான்யம் திட்டத்தின்கீழ் ரூ. 4.10 இலட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுகாதார வளாகம் பழுது நீக்கம் செய்யும் பணியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வுகளின் போது, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திருமதி.லலிதா, அரூர் வருவாய் கோட்டாட்சியர், திரு.சின்னுசாமி, பழங்குடியினர் நல திட்ட அலுவலர் திரு.கண்ணன், வட்டாட்சியர்கள் திருமதி.வள்ளி, திரு.ராதாகிருஷ்ணன், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.செல்வன், உதவி பொறியாளர் திரு.வெங்கடேசன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.வேடியப்பன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக