காரிமங்கலம் ராசப்பன்குட்டை ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 29 டிசம்பர், 2024

காரிமங்கலம் ராசப்பன்குட்டை ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி.


தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள குட்டூர் ராசப்பன்குட்டை ஏரி தற்போது பெய்து வரும் கனமழையாலும், கே.ஆர்.பி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீராலும் முழுவதுமாக நிரம்பியதை அடுத்து குட்டூர் ராசப்பன்குட்டை ஏரியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி திமுக ஒன்றிய செயலாளர் அடிலம் அன்பழகன் தலைமையில் நடைப்பெற்றது.


நிகழ்ச்சிக்கு வார்டு கவுன்சிலர் ரமேஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில்  பொதுபணித்துறை அதிகாரி குமார்  மற்றும் பொதுமக்கள் பூஜை செய்து மலர் தூவி ஏரியின் மதகை திறந்து வைத்தனர். இந்த ஏரியின் தண்னீரானது சிக்கதிம்மனஅள்ளி ஏரி, கரகப்பட்டி ஏரி, வண்ணான் ஏரி, பெரியமோட்டு பட்டி, தெல்லம்ம்பட்டி ஏரி, உச்சம்பட்டி ஏரி உள்ளிட்ட காரிமங்கலத்தை சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட  ஏரிகளுக்கு சென்றடையும் இதன் மூலம்  சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் குட்டூர் ராசப்பன்குட்டை ஏரி நிரம்பி துணை ஏரிகளுக்கு தண்ணீர் செல்வது பொது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இந்நிகழ்ச்சியில் அட்மா தலைவர் மாரியப்பன் சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் கண்ணபெருமாள், கணேசன், பூபதி, செந்தில்குமார், குருநாதன், மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad