தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்டது போடூர் கிராமம். இந்த கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் ஆதிதிராவிட மக்களுக்கு கடந்த 1971 ஆம் ஆண்டு 100 குடும்பத்தினருக்கு இலவச தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. தற்பொழுது 53 ஆண்டுகளில் ஒரு குடும்பத்தில் மூன்று மற்றும் நான்கு குடும்பங்கள் என 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இந்த பகுதியில் அடிப்படை தேவைகளான சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி, குடிநீர் வசதி இல்லாமல் நெருக்கடியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பென்னாகரம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறையினர் சார்பில் அரசுக்கு சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தை கைவிட்டு விட்டு ஆதிதிராவிடர் மக்களுக்கு என ஒதுக்கிய 2 அரை ஏக்கர் நிலத்தில் அதிக கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியை கட்டுவதற்கு தேர்வு செய்து உள்ளனர். இதனால் அப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளான விளையாட்டு மைதானம், கோவில், நியாயவிலை கடை மற்றும் நூலகம் உள்ளிட்டவைகள் கட்டுவதற்கு இடத்தை தேர்வு செய்ய வேண்டும். மேலும் வீடு இல்லாமல் ஒரே வீட்டில் மூன்று அல்லது நான்கு குடும்பங்களாக குடியிருந்து வீடுகள் இன்றி அவதிப்பட்டுவரும் அப்பகுதி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும். தற்போது மேல் நிலை நீர்தேக்க தொட்டி கட்ட தேர்வு செய்து கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தி தங்கள் வாழ்வாதாரம் சிறக்க அந்த இடத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என கூறி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதையும் மீறி பேரூராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டினால் தங்களுடைய ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு ஆவனங்களை மாவட்ட நிர்வாகத்திடமே ஒப்படைத்து விடுவோம் என அப்பகுதி பொது மக்கள் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக