தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்திற்கு உட்பட்ட தடங்கம் ஊராட்சி ஸ்ரீ மண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22.01.25 அன்று கிராம ஊர் மக்கள் ஒன்று கூடி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் அதியமான் ஜல்லிக்கட்டு பி ஆர் பேரவை சார்பில் மாவட்டத் தலைவர் தாபா சிவா, மாவட்ட செயலாளர் கே எம் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் என்.பி.பெரியண்ணன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இம்மனுவில் கூறி இருப்பதாவது, தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சிறப்பான முறையில் சட்டம் கொண்டு வந்திருப்பதால் அந்த சட்டத்திற்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்றும் தடங்கம் பகுதியில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பான முறையில் நடத்துவதற்கான தனியாருக்கு சொந்தமான போதுமான இடவசதியை தேர்வு செய்துள்ளோம் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு பேரவை மாவட்டத் தலைவர் பத்திரிகையாளர் சந்திப்பின்போது சுமார் 700 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட இளைஞரணி தலைவர் பழனி, செயலாளர் கார்த்திக், இளைஞர் அணி பொருளாளர் சுரேந்திரன் மற்றும் அதியமான் ஜல்லிக்கட்டு பிஆர் பேரவை கமிட்டி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக