அதனைத் தொடர்ந்து மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது, நான் தேர்ச்சி பெற்றேன், அதன் பின் ஜூன் மாதம் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பிலும் கலந்து கொண்டேன், பின் ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட உத்தேச தேர்வு பட்டியல் நான் இடம்பெற்றேன் தற்போது உத்தேச தேர்வு பட்டியல் வெளியிட்டு 4 மாதங்களுக்கு மேலாகியும் எங்களுக்கு இதனால் வரை கலந்தாய்வு நடைபெறவில்லை ஆனால் எங்களுடன் தேர்ச்சி பெற்று ஆதிதிராவிட பள்ளிகளுக்கு தேர்வாகிய ஆசிரியர்கள் பல நாட்களுக்கு முன்பு பணியில் சேர்ந்து விட்டனர்.
மேலும் பட்டதாரி ஆசிரியர்களை நிரப்புவதற்கான இத்தேர்வு 10 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்றதால் தனியார் பள்ளியில் வேலையை பார்த்த நான் வேலையினை திறந்து விட்டு படித்தேன் மேற்கண்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களில் அதிகமானோர் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவர் அவர்களின் பனிக்காலமும் மிகவும் குறைவு தற்போது அரையாண்டு தேர்வு காலம் என்பதால் தனியார் பள்ளிகளிலும் பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதால் எங்களின் வாழ்வாதாரம் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிப்படைந்துள்ளது, எனவே எங்களின் குடும்ப வாழ்வாதாரம் கருதி எங்களுக்கு பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநருக்கான கலந்தாய்வினை உடனே நடத்துவதற்கு பள்ளி கல்வித்துறைக்கு பரிந்துரை செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம், இவ்வாறு பட்டதாரி ஆசிரியர்கள் அமைப்பினர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு அளித்துள்ள மனுவில் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக