தருமபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் கலந்து கொண்டு என் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் செய்தனர் பாமக கவுரவ தலைவரும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜிகே. மணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளரும், தர்மபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்பி வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாமக மாவட்டத் தலைவர் செல்வகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில், மாநிலத் துணைத் தலைவர்கள் பாடி செல்வம், சாந்த மூர்த்தி, மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முகம், தர்மபுரி ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் சத்தியமூர்த்தி மற்றும் பாமக நிர்வாகிகள் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக