தமிழ்நாடு அரசின் கூடுதல் வரிவிதிப்பை கண்டித்து தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 11 டிசம்பர், 2024

தமிழ்நாடு அரசின் கூடுதல் வரிவிதிப்பை கண்டித்து தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


மத்திய மாநில அரசை கண்டித்து தர்மபுரி நகரப்பகுதியில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே மாவட்ட தலைவர் வைத்தியலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அப்போது ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள்ள குளறுபடிகளையும், 18 சதவிகித வாடகை வரி விதிப்பினை திரும்ப பெற வேண்டும், தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டிடங்களுக்கான வரி விதிப்பில் 6 சதவீதம் கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளதையும், லைசன்ஸ் கட்டணம், குப்பை வரி முரண்பாடு உள்ளிட்டவற்றை கலைந்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர். 


இந்த ஆர்ப்பாட்டத்தில், தர்மபுரி மாவட்ட தலைவர் வைத்தியலிங்கம் தர்மபுரி மாவட்ட செயலாளர் கிரிதர் தர்மபுரி மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து கிளைச் சங்கத்திலிருந்து வந்திருந்த அனைத்து நிர்வாகிகள் சுந்தரம், லோகு, அரூர் ஏ வி சின்னசாமி, பன்னீர், தீர்த்தமலை, பாப்பாரப்பட்டி, பென்னாகரம், ஒகேனக்கல், பாலக்கோடு, மாரண்டஹள்ளி, காரிமங்கலம், கம்பைநல்லூர், பொம்மிடி, மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, கோபிநாதம்பட்டி, கூட்ரோடு அனைத்து நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad