இந்த ரயில்வே கேட்டை ரயில்வே நிர்வாகம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மூடிவிட்டு அப்பகுதியில் தரைப்பாலம் அமைத்தனர். அவசரகதியில் அமைக்கப்பட்ட தரைப்பாலத்திற்க்கு அப்போதே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதனை கண்டுகொள்ளாத ரயில்வே நிர்வாகம் பிடிவாதமாக தரைப்பாலத்தை அமைத்தனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் தரைப்பாலத்தில் 10 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியது, தேங்கிய நீர் வெளியேற வழி இல்லாமல் உள்ளதால், அவ்வழியாக பொதுமக்கள் யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதியினர் ரயில்வே நிர்வாகத்திற்க்கு தகவல் அளித்தும் கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்த 100க்கு மேற்பட்ட பொதுமக்கள் மோதுகுலஅள்ளி ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பாலக்கோடு டி.எஸ்பி.மனோகரன், தாசில்தார் ரஜினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, ரேணுகா ஆகியோர் சம்பவ இடத்திற்க்கு சென்று மழைநீரை வெளியேற்றி போக்குவரத்திற்க்கு வழி செய்வதாக கூறியதையடுத்து பொதுமக்கள் தர்ணாவை கைவிட்டனர்.
ஆனால் நிரந்தர தீர்வு வேண்டும் என்றும் நீரை வெளியேற்ற மழை காலங்களில் தினமும் போராட முடியாது எனவும், உடனடியாக பழைய ரயில்வே கேட்டை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக