தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளி உள்வட்டம், கும்மனூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் 11.12.2024 அன்று நடைபெற உள்ளது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளி உள்வட்டம், கும்மனூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் 11.12.2024 அன்று நடைபெற உள்ளது. இம்முகாமில் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறைகளின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க உள்ளார்கள்.
எனவே தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளி உள்வட்டம், கும்மனூர் கிராமம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கி பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக