அரசின் கழிவுசெய்யப்பட்ட 3 வாகனங்கள் வரும் 02ம் தேதி பொது ஏலம் - மாவட்ட ஆட்சியர் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 27 டிசம்பர், 2024

அரசின் கழிவுசெய்யப்பட்ட 3 வாகனங்கள் வரும் 02ம் தேதி பொது ஏலம் - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி மாவட்ட வருவாய்‌ அலகில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்களின்‌ கட்டுபாட்டில்‌ இருந்து வந்த வருவாய்த்துறையைச்‌ சேர்ந்த 3 அரசு வாகனங்கள்‌ கழிவு செய்யப்பட்டுள்ளது, அதன்‌ விவரங்கள்‌ பின்வருமாறு:


  1. வருவாய்‌ கோட்டாட்சியர்‌, தருமபுரி. பயன்பாட்டில்‌ இருந்த வாகனம்‌ ரூ.1,30,000/-ற்கும்‌, 
  2. வட்டாட்சியர்‌, பென்னாகரம்‌, பயன்பாட்டில்‌ இருந்த வாகனம்‌ ரூ.1,80,000/-ற்கும்‌, 
  3. வட்டாட்டசியர்‌, அரூர் பயன்பாட்டில்‌ இருந்த வாகனம்‌ ரூ.1,82,000/- ற்கும்‌ ஏலம்‌ விட ஆரம்ப தொகையாக நிர்ணயம்‌ செய்யப்பட்டுள்ளது.


மேற்படி கழிவு செய்யப்பட்ட 03 வாகனங்களை 02.01.2025 அன்று முற்பகல்‌ 1.00 மணியளவில்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ ஏலம்‌ விடப்பபவுள்ளது. மேற்படி ஏலத்தில்‌ கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள்‌ ஏலத்தில்‌ கலந்து கொண்டு விலைப்புள்ளியை கோரலாம்‌ என இதன்மூலம்‌ தெரிவித்துக்கொள்ளப்படுகிறது, என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி. கி.சாந்தி இ.ஆ.ப, அவர்கள்‌ தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்‌.

கருத்துகள் இல்லை:

Post Top Ad