புதிய பாலம் அமைக்க போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 டிசம்பர், 2024

புதிய பாலம் அமைக்க போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை.


தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் அ.பள்ளிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சாலூர் மற்றும் கல்லாத்துக்காடு மற்றும் இந்திரா நகர் புரட்சி நகர் உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதில் கல்லாத்துக்காடு கிராமம் அருகில் உள்ள ஊர்கள் மற்றும் நகர பகுதிக்கு செல்லும் சாலையில் பாலம் சாமி பாறை ஆற்றின் குறுக்கே சாலையில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. 


தற்போது ஃபெஞ்சல் புயல் காரணமாக ஆற்றில் நீர் வரத்து அதிகரித்ததால் பாலம் உடைந்து விட்டது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் செல்லவும் விவசாய மக்களுக்கும் பொதுமக்களுக்கும். நகர் பகுதிக்கு வர முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். 


எனவே அ.பள்ளிப்பட்டி ஊராட்சி நிர்வாகம் மாவட்ட நிர்வாகம் மூலம் போர்க்கால அடிப்படையில் உடனடியாக பாலம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad