பாலக்கோடு அடுத்த கம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்குவதை உடனடியாக சீர் செய்யாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் எச்சரிக்கை - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 டிசம்பர், 2024

பாலக்கோடு அடுத்த கம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்குவதை உடனடியாக சீர் செய்யாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் எச்சரிக்கை


பாலக்கோடு அடுத்த கம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்குவதை உடனடியாக சீர் செய்யாவிட்டால் ரேஷன்கார்டு, வாக்காளர் அட்டை, ஆதார்கார்டு ஒப்படைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் பொதுமக்கள் எச்சரிக்கை.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு,பி.கொல்ல அள்ளி ஊராட்சியில் உள்ள கம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் ரயில்வே கேட் அமைக்கப்பட்டிருந்தது, இதன் வழியாக கம்மநாயக்கன்பட்டி, சவுளுர், மோட்டூர்உள்ளிட்ட 10க்கும்  கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரம் பொதுமக்களுக்கு மேல் வசித்து வரும் இப்பகுதியல் பொதுமக்கள்  மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்க்கும், விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள், கரும்பு, மரவள்ளி கிழங்குகள் உள்ளிட்ட விவசாய பொருட்களை கொண்டு செல்வதற்க்கும் பிராதன வழியாக  இந்த ரெயில்வே கேட் பாதை இருந்தது. இந்த ரயில்வே கேட்டை ரயில்வே நிர்வாகம் கடந்த சில்  மாதங்களுக்கு முன்பு மூடிவிட்டு அப்பகுதியில் தரைப்பாலம் அமைத்தனர்.


ஆனால் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேறுவதற்கு பதிலாக தண்ணீர் வெளியே இருந்து உள்ளே வருவதால் சுமார் 6 அடி அளவிற்க்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதையடுத்து 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ரெயில்வே தண்டாளம் அருகே நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும் நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தராவிட்டால் தங்களுடைய ரேஷன்கார்டு, வாக்காளர் அட்டை, ஆதார்கார்டுகளை மாவட்ட ஆட்சியரிடம்  ஒப்படைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad