ஆபத்தை உணராமல் எதிர்திசையில் வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகள், நடவடிக்கை எடுக்க கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 டிசம்பர், 2024

ஆபத்தை உணராமல் எதிர்திசையில் வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகள், நடவடிக்கை எடுக்க கோரிக்கை.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அதியமான்கோட்டை முதல் ஓசூர் வரை புதிய நான்கு வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றனர். எர்ரணஹள்ளி, ரெட்டியூர், தளவாய்ஹள்ளி புதூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் இருந்து சொகுசு கார், லாரி, பேருந்து, இருசக்கர வாகனங்கள் என தேசிய நெடுஞ்சாலையில் எதிர் எதிசையில் செல்லுவதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 


புதிய தேசிய நெடுஞ்சாலை திறக்கப்பட்ட சில மாதங்களில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடதக்கது. எதிர்திசையில் பயணிக்கும் வாகனங்களை கட்டுப்படுத்தவும், அப்பகுதியில் எச்சரிக்கை பலகை உள்ளிட்டவை இல்லாததால் இது போன்ற விபத்துகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


எனவே மாவட்ட நிர்வாகம் தேசிய நெடுஞ்சாலையில் எச்சரிக்கை பலகை, சிக்னல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad