அதன் பின்பு நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் விரைந்து முடிக்க வலியுறுத்தப்பட்டது. ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் பேசுகையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒத்துழைப்பு நல்கிய அனைத்து கவுன்சிலர்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் நன்றி கூறினார். இன்று நடைபெற்று வரும் ஒன்றிய குழு கடைசி கூட்டத்தில் பென்னாகரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை தமிழக அரசு உடனே நிறைவேற்ற கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பென்னாகரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வருவாய்களை மாவட்ட நிர்வாகம் ஒன்றிய நிர்வாகத்திற்கு வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், ஷகிலா, ஒன்றியக் குழு துணைத் தலைவர் அற்புதம் அன்பு மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக