தருமபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட துறிஞ்சிப்பட்டி ஊராட்சியில் உள்ள 7-வது வார்டுபகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இந்த பகுதிக்கு கடந்த ஒரு மாதம் குடிநீர் வழங்கப்படாமல் உள்ளதாக தெரிகிறது, இப்பகுதி பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பாப்பிரெட்டிப்பட்டி தர்மபுரி சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர், பொம்மிடி காவல் ஆய்வாளர், வருவாய் கோட்டாட்சியர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் செயலாளர் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலைக்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக