புயல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 2 டிசம்பர், 2024

புயல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி மாவட்டத்தில்‌ மழையின்‌ காரணமாக நாளை (02.12.2024) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும்‌ மழையின்‌ காரணமாக காட்டாறு, குளம்‌ குட்டை, உள்ளிட்ட நீர்‌ நிலைகளில்‌ தண்ணீர்‌ அதிகரித்து வருகிறது. எனவே பெற்றோர்கள்‌ தங்களது குழந்தைகளை அருகில்‌ உள்ள நீர்‌ நிலைகளை சுற்றி பார்க்கவோ அல்லது நீர்நிலைகள்‌ மற்றும்‌ மின்‌ கம்பங்களுக்கு அருகில்‌ விளையாடவோ கட்டாயம்‌ அனுமதிக்க கூடாது.


அனைத்து பெற்றோர்களும்‌ தங்களது குழந்தைகளை வீட்டிற்குள்‌ தங்களது கண்காணிப்பிலே பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்‌. விடுமுறை என்பதால்‌ பள்ளி மாணவ, மாணவிகள்‌ வெளியில்‌ செல்லாமல்‌, தங்களது வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும்‌. மேலும்‌ மழை வெள்ள பாதிப்புகள்‌ மற்றும்‌ உதவிகள்‌ குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலகத்தில்‌ 24 மணி நேரமும்‌ செயல்படும்‌ பேரிடர்‌ மேலாண்மை கட்டுப்பாட்டு அறையின்‌ இலவச தொலைபேசி எண்‌ 1077 தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்‌. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad