தோட்டக்கலைத்‌ துறை மற்றும்‌ விதை சான்றளிப்புத்‌ துறைகளுக்கான ஆய்வுக்கூட்டம்‌ நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 12 டிசம்பர், 2024

தோட்டக்கலைத்‌ துறை மற்றும்‌ விதை சான்றளிப்புத்‌ துறைகளுக்கான ஆய்வுக்கூட்டம்‌ நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூடுதல்‌ கூட்டரங்கில்‌ தோட்டக்கலை துறை இயக்குநர்‌ திரு.இரா.குமாரவேல்‌ பாண்டியன்‌ இஆப., அவர்கள்‌ தலைமையில்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி அவர்கள்‌ முன்னிலையில்‌ தோட்டக்கலைத்‌ துறை மற்றும்‌ விதை சான்றளிப்புத்‌ துறைகளுக்கான ஆய்வுக்கூட்டம்‌ இன்று (12.12.2024) நடைபெற்றது.


இக்கூட்டத்தில்‌ தோட்டக்கலை துறை இயக்குநர்‌ திரு.இரா.குமாரவேல்‌ பாண்டியன்‌ இஆப,, அவர்கள்‌ தெரிவித்ததாவது:- நுண்ணிர்‌ பாசனத்‌ திட்டத்தில்‌ தோட்டக்கலைத்‌ துறை மற்றும்‌ வேளாண்‌ பொறியியல்‌ துறை அலுவலர்கள்‌ இணைந்து நிலுவையில்‌ உள்ள கூட்டாய்வுகளை துரிதபடுத்தி விரைவில்‌ முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


மேலும்‌, தேசிய தோட்டக்கலை இயக்கம்‌, மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம்‌, கலைஞரின்‌ அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்‌ வளர்ச்சி திட்டம்‌ மற்றும்‌ தேசிய வேளாண்‌ வளர்ச்சி திட்டம்‌ போன்ற திட்டங்களின்‌ திட்டப்‌ பணிகள்‌ அனைத்தும்‌ விரைவில்‌ முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு தோட்டக்கலை துறை இயக்குநர்‌ திரு.இரா.குமாரவேல்‌ பாண்டியன்‌ இஆப., அவர்கள்‌ தெரிவித்தார்கள்‌. இந்த ஆய்வுக்கூட்டத்தில்‌ துறை சார்ந்த அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகள்‌ வழங்கப்பட்டது.


இக்கூட்டத்தில்‌ வேளாண்மைத்துறை இணை இயக்குநர்‌ திரு.மரிய ரவி ஜெயக்குமார்‌, தோட்டக்கலை மற்றும்‌ மலைப்பயிர்கள்‌ துறை துணை இயக்குநர்‌ திருமதி. பாத்திமா, விதை சான்றளிப்புத்‌ துறை துணை இயக்குநர்‌ திரு.மணி, வோளாண்‌ பொறியியல்‌ துறை செயற்பொறியாளர்‌ திரு.அறிவழகன்‌, உதவி இயக்குநர்‌ விதை சான்றளிப்புத்‌ துறை, அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள்‌, தோட்டக்கலை அலுவலர்கள்‌ மற்றும்‌ உதவி தோட்டக்கலை அலுவலர்கள்‌ கலந்துக்கொண்டனர்‌.

கருத்துகள் இல்லை:

Post Top Ad