தருமபுரியில் பல்வேறு சமூக சேவைகளை செய்துவரும் மை தருமபுரி அமைப்பின் பசிக்குதா வாங்க திட்டத்தின் மூலம் தினந்தோறும் தருமபுரி அரசு மருத்துவமனை எதிரில் நோயாளிகளின் பார்வையாளர்களுக்கு மதியம் மற்றும் மாலை என குறைந்தது 500 நபர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர், இந்த திட்டத்தின் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளாக உணவு வழங்கி வருகின்றனர், இன்றைய நிகழ்வில் அதியமான் கோட்டை அடுத்து அமைந்துள்ள செந்தில் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற மாணவர்கள் உணவு திருவிழா நிகழ்ச்சி, அந்த நிகழ்வில் கிடைத்த தொகையை ஏழை மக்களுக்கு உதவும் வகையில் மை தருமபுரி அமைப்பின் பசிக்குதா வாங்க சாப்பிடுங்க மூலம் சுமார் 500 நபர்களுக்கு உணவு வழங்கினர்.
இந்த நிகழ்விற்கு செந்தில்பப்ளிக் பள்ளி முதல்வர் செந்தில் முருகன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு உணவு வழங்கினர். மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், ஒருங்கிணைப்பாளர்கள் அருள்மணி, கிருஷ்ணன் ஆகியோர் உணவு வழங்கும் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக