தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பி.அக்ரஹாரத்தில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் கோயிலின் முன் பகுதியில் ஒன்றிய கவுன்சிலரின் நிதியில் மூன்று லட்சம் மதிப்பீட்டில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால் கோயிலின் புனித தன்மை பாதிக்கப்படுவதாக கூறி கோவிலில் பணிபுரியும் செயல் அலுவலர் கண்ணன் மற்றும் பூசாரி சிவலிங்கம் ஆகியோர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் தங்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் பணம் மற்றும் பொருட்களை கோவில் பூசாரி முறைகேடாக பயன்படுத்துவதாக கூறி முனியப்பன் கோயில் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு மகாலட்சுமி நல்லம்பள்ளி தாசில்தார் சிவக்குமார் மற்றும் அறநிலை துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் வரும் 17ஆம் தேதி இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக