தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறையின் சார்பாக சிறப்பு சொற்பொழிவு 'கலாச்சார ஆய்வுகள்: ஓர் அறிமுகம்' என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. இதில் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் முனைவர் பத்மநாபன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு இலக்கியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கலாச்சாரம் தொடர்பான ஆய்வுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
தொடர்ந்து இன்றைய கால சூழலில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு இக்கலாச்சார படிப்புகளில் உள்ள வாய்ப்புகள் பற்றியும் எடுத்துரைத்தார். முன்னதாக இந்நிகழ்வில் ஆராய்ச்சி மைய இயக்குனர் முனைவர் மோகனசுந்தரம் அவர்கள் தலைமை உரை ஆற்றினார். தொடர்ந்து ஆங்கிலத் துறை தலைவர் முனைவர் கோவிந்தராஜ் விழா துவக்க உரை ஆற்றினார். முன்னதாக ஆங்கிலத்துறை உதவி பேராசிரியரும் நிகழ்வு ஒருங்கிணைப்பாளருமான முனைவர் கிருத்திகா நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். இறுதியாக முதலாம் ஆண்டு மாணவி ஸ்ரீதா நன்றி உரையாற்றினார். இந்நிகழ்வை இரண்டாம் ஆண்டு மாணவி ஸ்ரீதா தொகுத்து வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக