தருமபுரி மாவட்டத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் வழங்குவதற்காக அரசு கேபிள் டிவி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 5 ஆயிரம் அதிநவீன எச்டி செட்டாப் பாக்ஸ் இருப்பறையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் இன்று (20.12.2024) நேரில் பார்வையிட்டார்கள்.
தருமபுரி கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சார்பில் அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் எச்டி செட்டாப் பாக்ஸ் வழங்கிட வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்ததை தொடர்ந்து, கோரிக்கையை ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின் படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு அரசு கேபிள் டிவி புதிய செட்டாப் பாக்ஸ் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
அதன்படி தருமபுரி மாவட்டத்தில் உள்ள கேபிள் ஆபரேட்டர்களுக்கு வழங்குவதற்காக அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இருந்து 5 ஆயிரம் எச் டி செட்டாப் பாக்ஸ்கள் வரப்பெற்றுள்ளன இந்த செட்டாப் பாக்ஸ் தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள அரசு கேபிள் டிவி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது தருமபுரி மாவட்டத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் வழங்குவதற்காக இருப்பில் உள்ள இந்த எச்டி செட்டாப் பாக்சை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
இந்நிகழ்வின் போது, அரசு கேபிள் டிவி தனி தாசில்தார் திரு.ராஜராஜன், கேபிள் டிவி வினோகிஸ்தர்கள் திரு.மாது, திரு.சத்யநாதன், திரு.எஸ்.சரவணன், திரு.எஸ்.ராஜாராஜன் மற்றும் கேபிள் ஆப்பரேட்டர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக