தர்மபுரி மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூர் ஒன்றியம் சுஞ்சல்நத்தம் மற்றும் அஜ்ஜன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளான ஈச்சப்பாடி, சிகரல அள்ளி ஆகிய இடங்களில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட சார்பில் புதிய கற்போருக்கான கணக்கெடுப்புகள் குறித்த ஆய்வினை வயது வந்தோர் கல்வி இயக்கக இணை இயக்குனர் பொன் குமார் பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டு ஆலோசனை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் போது தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, உதவி திட்ட அலுவலர் மஞ்சுளா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகனப்பிரியா வட்டார கல்வி அலுவலர் முருகன் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொ மகேஷ் ஆசிரியர் பயிற்றுநர்கள் குணசேகரன், சக்திவேல், மலர்விழி மற்றும் தலைமை ஆசிரியர்கள் ராஜா, கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக