பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட, கடத்தூர் ஊராட்சி ஒன்றியம், தொங்கனூர் மற்றும் கோபிசெட்டிபாளையம் ஆகிய பகுதியில், ரூ.29 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக சுற்றுச்சுவர் மற்றும் 30,000-லிட்டர், OHT டேங்க் அமைக்கும் பணியை, பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் அதிமுகவின் ஒன்றிய செயலாளர் மதிவாணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன், பொதுக்குழு உறுப்பினர் துரை, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் உதயா, மோகனசுந்தரம், மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் ஜவகர், பாலு, மாது, கனல் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக