பாலக்கோடு நந்தாஸ் மஹாலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 டிசம்பர், 2024

பாலக்கோடு நந்தாஸ் மஹாலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாவட்ட மாநாடு நடைபெற்றது.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு நந்தாஸ் திருமணமண்டபத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தர்மபுரி மாவட்ட 24 வது மாநாடு சிசுபாலன் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில்  தருமபுரி மாவட்ட தலைவர்களின் நினைவு ஜோதி பெறப்பட்டது, மூத்த தோழர் காளியப்பன் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்து அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வரவேற்பு குழு தலைவர்  நாகராசன் வரவேற்று பேசினார்.


மத்தியக்குழு உறுப்பினர் சண்முகம் மாநாட்டை  துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் குமார் அரசியல் வேலை ஸ்தாபன அறிக்கை வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்  கிரைஸாமேரி வரவு செலவு கணக்கை சமர்பித்தார். 


இக்கூட்டத்தில் பேசிய தலைவர்கள் அரசியல் சாசனத்தை பாதுகாக்க தொடர்ந்து போராட்டம் நடத்தவேண்டும். கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரியை உயரத்தியுள்ளனர். ஜிஎஸ்டி வரியை அதிக அளவில் உயர்த்தியுள்ளனர். கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை. இதனால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வில் இருந்து மக்களை காப்பற்ற வேண்டும்


தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டுவரும் மாசோதவை அமைச்சரவை கூட்டத்தில்ஒப்புல்அளித்துள்ளனர். இது அரசியல் சட்டத்திற்க்கு எதிரானது. தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 கொண்டுவந்துள்ளது. தற்போது இந்த சட்டத்தால் அரசு துறைகக்கு சொந்தமான நிலங்களை அரசு மற்றும் தனியார் தேவைக்கு குறைந்தது 250 ஏக்கர் நிலம் எடுத்துக்கொள்ள முடியும் இந்த சட்டம் அரசு இதழில் வெளிவந்துள்ளது எனவே விவசாயிகளை பாதிக்கும் இந்த சட்டத்தை கைவிட வேண்டும் என்பன குறித்து பேசினர். இம்மாநாட்டில் திரளான தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad