தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே எட்டையாம்பட்டி கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்ற நிலையில் ஊத்தங்கரை அருகே பேருந்து பேருந்து விபத்துக்குள்ளானது, இதில் பலத்த காயங்களுடன் 23 பேர் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் இருந்து தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் வர்களை தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி.சாந்தி, சட்ட மன்ற உறுப்பினர் SP. வெங்கடேஸ்வரன், திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.தடங்கம்.பெ.சுப்ரமணி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறி மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினர்.
இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், திமுக பொருப்பாளர்கள் தங்கமணி, சரவணன், பெரியண்ணன், கௌதம், ஸ்டாலின், சூர்யா மற்றும் திமுக மற்றும் பாமக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக