கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு TACTV-யின் டிஜிட்டல் HD செப்டாப் பாக்ஸ்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 23 டிசம்பர், 2024

கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு TACTV-யின் டிஜிட்டல் HD செப்டாப் பாக்ஸ்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.


தருமபுரி கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சார்பில் அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் எச்டி செட்டாப் பாக்ஸ் வழங்கிட வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்ததை தொடர்ந்து, கோரிக்கையை ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின் படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு அரசு கேபிள் டிவி புதிய செட்டாப் பாக்ஸ் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.


அதன்படி தருமபுரி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ மாவட்டத்தில்‌ உள்ள கேபிள்‌ ஆபரேட்டர்களுக்கு வழங்குவதற்காக அரசு கேபிள்‌ டிவி நிறுவனத்தில்‌ இருந்து முதற்‌ கட்டமாக 5 ஆயிரம்‌ எச்‌டி செட்டாப்‌ பாக்ஸ்கள்‌ வரப்பெற்றுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப, அவர்கள்‌ இன்று கேபிள்‌ ஆபரேட்டர்களுக்கு வழங்கினார்‌.


இந்த நிகழ்வில் அரசு கேபிள்‌ டிவி தனி வட்டாட்சியர்‌ திரு ராஜராஜன்‌, கேபிள்‌ டிவி வினோகிஸ்தர்கள்‌ மற்றும்‌ கேபிள்‌ ஆப்பரேட்டர்கள்‌ உள்ளிட்டோர்‌ கலந்து கொண்டனர்‌.

கருத்துகள் இல்லை:

Post Top Ad