சின்னாறு ஆற்று பாலம் அருகே முன்விரோதத்தில் டிராக்டர் டிரைவர் கழுத்து அறுத்து படுகொலை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 டிசம்பர், 2024

சின்னாறு ஆற்று பாலம் அருகே முன்விரோதத்தில் டிராக்டர் டிரைவர் கழுத்து அறுத்து படுகொலை.


தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி ஆற்றுப்பாலம் அருகே ஆண் ஒருவர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக 25ம் தேதி நேற்றிரவு 10 மணிக்கு பஞ்சப்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது, இதையடுத்து சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்ற மாரண்டஅள்ளி காவல் ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


போலீசார் விசாரனையில் கொலை செய்யப்பட்டவர் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை அருகே திம்ஜேபள்ளியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் ரகு (வயது. 35) என்பதும் இவரது மனைவி ராதா (வயது. 30) இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகள் உள்ளதும், கடந்த 10 வருடமாக கனவன் - மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் ராதா கனவனை பிரிந்து ஒட்டர்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருவதும் தெரிய வந்தது, இது தொடர்பாக பஞ்சப்பள்ளி அடுத்த பி.புதுர் கிராமத்தை சேர்ந்த லோகேஷ் (எ) கோவிந்தராவ் (வயது. 25) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்ததில் இவரது அண்ணன் சுரேஷ் ரகுவிடம் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்ததாகவும், டிராக்டர் கவிழ்ந்து விபத்திற்க்குள்ளானதில் லோகேஷின் அண்ணன் சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்ததால், ரகுவை பழிவாங்க முடிவு செய்து அதற்காக திட்டம் தீட்டிய லோகேஷ் நேற்று மாலை ரகுவை மது அருந்த அழைத்துள்ளார். 


இருவரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர், அப்போது போதையில் இருந்த ரகுவை தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த ஷேவிங் செய்யும் பிளேடால் கரகரவென ரகுவின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாகவும், ஆனால் போலீசாரிடம் சிக்கி கொண்டதாகவும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து லோகேசை கைது செய்த போலீசார் பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad