தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி மேற்கு மாவட்ட செயலாளர் விஜய்சங்கர் தலைமையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவர் உதயகுமார், பொருளாளர் ராமசந்திரன், நகரசெயலாளர் முருகன், நகர துணை செயலாளர் ராஜா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையடுத்து பேருந்து நிலையம் முன்பு மற்றும் தக்காளிமண்டி அருகே வைக்கப்பட்டிருந்த தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் அவர்களின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ரத்னம், கோவிந்தராஜ், ஒன்றிய கெயலாளர்கள் ஞானவேல், நகர நிர்வாகிகள் கிருஷ்ணன், காவேரி, அஸ்லாம், அசோக் ஒன்றிய நிர்வாகிகள் சேகர், சக்திவேல், கனகராஜ், வீரன், முருகன் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக