மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்கள் டாக்டர் அம்பேத்கரை அவமதித்தாக கூறி தருமபுரி கிழக்கு மாவட்ட விசிக சார்பில் மபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா தலைமையில் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் டாக்டர் அம்பேத்கரை அவமதித்தார் அவர் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து உடனே விலக வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மண்டல செயலாளர் பொ.மு.நந்தன் மண்டல துணை செயலாளர் மின்னல்சக்தி தருமபுரி தொகுதி செயலாளர் சமத்துவன்(எ)சக்தி சிபிஐ மாவட்ட துணை செயலாளர் தமிழ்குமரன் தேசிய மக்கள் கட்சி நிறுவனர் இனமுரசுகோபால் விசிக மாவட்ட செய்தி தொடர்பாளர் செ.பாரதிராஜா ஒன்றிய செயலாளர்கள் எம்.எஸ்.மூவேந்தன் திருலோகன் மாநில துணை செயலாளர்கள் தலித்சேட்டு முத்துகுமரன் காதர்பாஷா தொகுதி துணை செயலாளர் பெ.கேசவன், துரைவளவன் தீரன்தீர்த்தகிரி அ.சி.தென்னரசு சின்னத்தம்பி செந்தில் வளவன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக