இந்த ரயில் மறியல் போராட்டத்திற்க்கு பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் விஜயகுமார், காட்சி ஊடக மாவட்ட அமைப்பாளர் மகிழ்வாணன், மாவட்ட தொண்டர் அணி துணை செயலாளர் செந்தில், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட அமைப்பாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரயில் மறியல் போராட்டத்திற்காக ரயில் நிலையம் முன்பு குவிந்த விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தி மறியல் போரட்டத்திற்க்கு அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த விசிக தொண்டர்கள் ரயில் நிலையம் முன்பு, மத்திய அரசுக்கு எதிராகவும், சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களை அவமதிக்கும் வகையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனே பதவி விலக வேண்டும் என்றும், ஆர்.எஸ்.எஸ்.ன் கைப்பாவையாக செயல்படும் பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணி மாவட்ட செயலாளர் மாதம்மாள், ஒன்றிய செயலாளர்கள், நாராயணன், அம்பேத்கார், ஒன்றிய துணை செயலாளர் சிவக்குமார், நிர்வாகிகள் முனியம்மாள், புனிதா, முனிவேல், மாறன், சக்திவேல், முனிராஜ், ராஜேந்திரன், சேட்டு, மாதப்பன், மாதுராஜ், பிரசாந்த், கிருஷ்ணன், மோகன், சரவணன், சுரேந்தர்வர்மா, சுரேஷ், சக்திவேல், அருன் , இன்டமங்கலம் சக்திவேல், அதியமான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு கருதி டி.எஸ்.பி.மனோகரன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக