நல்லம்பள்ளி பகுதியில் மழை நீர் பாதித்த பகுதியை ஆய்வு செய்த வெங்கடேஸ்வரன் MLA. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 டிசம்பர், 2024

நல்லம்பள்ளி பகுதியில் மழை நீர் பாதித்த பகுதியை ஆய்வு செய்த வெங்கடேஸ்வரன் MLA.


தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் கம்மம்பட்டி ஊராட்சி பாப்பம்பட்டி வினாயகபுரம் வெள்ளார் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் தெப்பையாறு அணை நீர்மட்டம் உயர்ந்து பொது பணி துறை நேற்று அணையின் கால்வாய் திறந்து விடப்பட்டது. அந்த மழைநீர் அப்பகுதி கால்வாய் நிறைந்து வருவதால் நடைபாலம் மற்றும் தரைப்பாலம் உடைந்து பொதுமக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 


உடனடியாக நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக. எஸ்பி வெங்கடேஸ்வரன் சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களிடம் தெரிவித்தார், இந்த ஆய்வில் பாமக நிர்வாகிகள், ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு உறுப்பினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்

கருத்துகள் இல்லை:

Post Top Ad