மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களில் நினைவு நாளில் 500 பேருக்கு உணவு வழங்கிய தேமுதிகவினர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 27 டிசம்பர், 2024

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களில் நினைவு நாளில் 500 பேருக்கு உணவு வழங்கிய தேமுதிகவினர்.


மை தருமபுரி அமைப்பின் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனை நோயாளிகளின் பார்வையாளர்களுக்கு தினந்தோறும் மதியம் மற்றும் மாலை வேளைகளில் உணவு வழங்கி வருகின்றனர். இன்று மை தருமபுரி அமைப்பின் 1354 ஆவது உணவு சேவை திட்டத்தின் நாளாகும், இன்று மறைந்த தேமுதிக தலைவர்  விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் தேமுதிக கட்சியின் சார்பாக 500 நபர்களுக்கு மதிய உணவு மை தருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க உணவு சேவை திட்டத்தின் மூலம் வழங்கினர். 


இந்த நிகழ்வில் தருமபுரி நகர தேமுதிக கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். மை தருமபுரி அமைப்பின் சார்பாக நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், உணவு ஒருங்கிணைப்பாளர் அருள்மணி, அருணாசலம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad