தருமபுரி மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் MATHI (மதி) - திட்டத்தின் கீழ் கொள் முதல் செய்யப்பட்ட கணினிகள், அலுவலக உபகரணங்கள் (ம) மரச்சாமான்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்து 5 வருடங்கள் முதல் 10 வருடங்கள் முடிய பயன்பாட்டில் இருந்து தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பொருட்களை கழிவு நீக்கம் செய்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இவ்வலுவலகத்தில் மதி(MATHI)- திட்டத்தின் கீழ் கொள் முதல் செய்யப்பட்டு தற்போது பயன்படுத்த முடியாத / உடைந்த நிலையில் உள்ள பொருட்களை மொத்தமாக பெற்றுக்கொள்ள விருப்பமுள்ள நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ / தபால் மூலமாகவோ 24.12.2024 அன்று இவ்வலுவலக கடிகர நேரம் 4.00 பிற்பகல் வந்து சேரும் வகையில் அனுப்பிவைக்க தெரிவிக்கப்படுகிறது.
முகவரி: திட்ட இயக்குநர்/இணை இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, 2வது தளம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டிடம், மாவட்ட ஆட்சியரகம், தருமபுரி, என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக