ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6ஆயிரத்து 500 கன அடியாக அதிகரிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 12 டிசம்பர், 2024

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6ஆயிரத்து 500 கன அடியாக அதிகரிப்பு.


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, கேரட்டி, பிலிகுண்டுலு, ராசிமணல்  உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. இந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது.


இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் காலை 6மணி நிலவரப்படி வினாடிக்கு 5 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து அதிகரித்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி 6  ஆயிரத்து 500  கன அடியாக அதிகரித்தது. இதன் காரணமாக மெயின் அருவி, சினிப்பால்ஸ், ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து காவிரி ஆற்றில் பாய்ந்து ஓடுகிறது.


காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad