தருமபுரி மாவட்ட திமுக சார்பில் தென்கரைக்கோட்டை அடுத்த பாத்திமா நகரில் கிருஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது, இந்த விழாவில் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் திரு பி.பழனியப்பன் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடும் வகையில் முதல் நிகழ்வாக நலிந்த கிறிஸ்தவ குடும்பங்களுக்கு பரிசுப் பொருட்களை தென்கரைக்கோட்டை ஊராட்சியில் அமைந்துள்ள பாத்திமா நகரில் உள்ள கிருத்துவ தேவாலயத்தில் கேக் வெட்டி சுமார் 160 குடும்பங்களுக்கு வேட்டி, சேலைகள், ஹாட் பாக்ஸ், இனிப்பு மற்றும் கார வகைகள் என வழங்கி சிறப்பித்து உரையாற்றினார்.
இந்நிகழ்வில் திமுகவின் கடத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் த.நெப்போலியன் மற்றும் அரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சௌந்தரராசு அவைத்தலைவர் வேடியப்பன் உட்பட மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் திமுக சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பொதுமக்கள், திமுக தொண்டர்கள் என திரளானோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக