தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியில் உள்ள அசம்பளி ஆப் காட் சர்ச்சில் நடைப்பெற்ற கிருஷ்துமஸ் விழாவில் கிருஷ்துவ சகோதரர்களுக்கு திமுக சார்பில் பரிசு பொருட்கள் வழங்கும் விழா பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்றது.
தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அவர்களின் ஏற்பாட்டின்படி, பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமையில் மாரண்டஅள்ளி அசம்பளி ஆப் காட் சர்ச்சில் நடைப்பெற்ற கிருஸ்துமஸ் விழாவில் 100க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ சகோதரர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் இனிப்புக்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கி கிருஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திகா பன்னீர்செல்வம், கவுன்சிலர்கள் கார்த்திகேயன், முனிராஜ், யதிந்தர், சிவகுமார், திமுக நகர துணை செயலாளர் மாதையன், நகர பொருளாளர் ஆறுமுகம், சிறுபான்மையினர் அணி நகர அமைப்பாளர் ஸ்டார் பாய், இளைஞர் அணி நிர்வாகி வசிம், ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக